இன்றைய நடப்பு நிகழ்வுகள் 2 மே 2019 தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு

தற்போதைய நிகழ்வுகள் 2 மே 2019 தமிழ்நாடு இந்தியா உலகம் விளையாட்டு


நடப்பு நிகழ்வுகள் 2 மே 2019
INDIAGRADE Tamil Current Affairs: இந்த பக்கத்தில் நீங்கள் நடப்பு நிகழ்வுகளை உடனுக்குடன் பெறலாம். நாங்கள் அனைத்து வகையான செய்திகளையும் இந்த பக்கத்தில் அப்டேட் செய்வோம். உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் உடனே கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும். நீங்கள் இந்த பக்கத்தில் உலக செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், வர்த்தக செய்திகள், அரசியல் செய்திகள், விளையாட்டு செய்திகள் போன்றவற்றை பெறலாம்.          

நீங்கள் TNPSC, IBPS, Railway, Bank, SSC போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் எங்கள் INDIAGRADE பக்கத்தை தொடர்ந்து பார்க்கவும். இன்றினிலிருந்து தொடர்ந்து மூன்று மாதத்திற்கு நீங்கள் நடப்பு நிகஸ்வுகளை படித்து வந்தால் அரசு வேலை அல்லது தனியார் வேலையில் சேர்ந்துவிடலாம்.   


மே 2 நடப்பு நிகழ்வுகள்:


தமிழ்நாடு:

* அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019 முதலாம் ஆண்டு பி.இ பி.டெக் சேர்வதற்கு ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்பம். மாணவ மாணவிகள் www.tneaonline.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

* கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவுக்கு நிதியுதவி அளித்தது தமிழக அரசு. ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற கோமதி மரிமுத்துவிற்கு தமிழக அரசு சார்பாக 10 லட்ச ரூபாயும், ஆரோக்கிய ராஜீவுக்கு 5 லட்ச ரூபாயும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.     

இந்தியா:

* CBSE 12th தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மாணவ மாணவிகளின் தேர்வு விகிதம் 83.4%. Hansika Shukla மற்றும் Karishma Arora ஆகியவர்கள் 500 இக்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பெற்றனர்.

* NYAY Scheme: ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ரூபாய் 72000 அனைவரது வங்கி கணக்கிலும் போடப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.   

உலகம்: 

* ஜப்பான் மன்னராக பதவியேற்றார் நருஹிட்டோ(Naruhito): ஜப்பான் நாட்டின் மன்னராக இருந்த அகிஹிட்டோ வயோதிகம் காரணமாக முடி துறந்ததால் அவரது மகன் நருஹிட்டோ புதிய மன்னராக பதவியேற்றார்.

* சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அஸார் அறிவித்தது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில். ஜெய்ஷ் - இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.     

விளையாட்டு:

ஐபில் 2019 ( IPL T20 ):

சென்னை  VS டெல்லி:

Chennai Vs Delhi
டெல்லி அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தி வெற்றி. சென்னை அணி நிர்ணியக்கப்பட்ட 20 ஓவர்களில் 179 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ரெய்னா 59 ரன்களை எடுத்தார். 180 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 18 புள்ளிகள் பெற்று மீண்டும் முதல் இடத்திற்கு வந்தது.

ஃபானி புயல் ( Cyclone Fani ):  

Cyclone Fani
வங்கக் கடலில் உருவாகி அதிதீவிர புயலாக மாறியுள்ள ஃபானி புயல் ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் 03.05.2019 கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. புயலின் வேகம் 175 முதல் 185 கி.மீ இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment